சென்னை-விளாடிவோஸ்டாக் கிழக்கத்திய கடல் சார் வழித்தடம் ஆனது எண்ணெய், உணவு மற்றும் இயந்திரங்கள் அடங்கிய சரக்குப் பொருட்களின் போக்குவரத்திற்கு உதவும் வகையில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவிற்கும் தொலை தூரக் கிழக்கு ரஷ்யாவிற்கும் இடையே சரக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான காலம் 40 நாட்களிலிருந்து 24 நாட்களாக குறைந்துள்ளது.
இது போக்குவரத்துத் தொலைவினை 40% வரை குறைத்துள்ளது.
இது ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல், தென் சீனக் கடல், மலாக்கா நீர்ச் சந்தி, அந்த மான் கடல் மற்றும் வங்காள விரிகுடா வழியாக செல்கிறது.
கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித் தடத்தில் (IMEEC) இந்தியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன.