ஆறு பக்கங்களையுடைய டெரகோட்டா (மெருகூட்டப்படாத மட்பாண்டப் பொருள்) பொருளாலான பகடை மற்றும் கிரானைட்டினாலான விவசாயக் கருவிகள் ஆகியவை கீழடியில் நடைபெறும் ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டெக்கப்பட்டுள்ளன.
இந்த ஏழாம் கட்டத்தில், கீழடியில் மூன்று அகழிகளிலும் கொந்தகையில் மூன்று அகழிகளிலும் மற்றும் அகரத்தில் ஒரு அகழியிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருப்பு மற்றும் செந்நிறத்திலான மட்கல உடைசல்கள் மற்றும் கிரானைட்டாலான கலப்பை போன்ற விவசாயக் கருவிகளின் பாகங்கள் ஆகியவையும் இங்கு கண்டெடுக்கப் பட்டுள்ளன.
இரு வெவ்வேறு பொருட்களாலான பகடைகள் சமுதாயத்தில் வெவ்வேறு பிரிவுகள் இருந்ததையும் (செல்வம் படைத்தவர்கள் தந்தத்திலான பகடையை டெரகோட்டா என்பதினால் ஆன பகடையை ஏழை மக்களும் பயன்படுத்தினர்) மேலும் இந்நாகரீகத்தினர் எண் கணிதம் சார்ந்த அறிவையும் வளர்த்து வந்தனர் என்பதையும் இது குறிக்கிறது.