சிவகங்கையிலுள்ள கீழடியில் நடைபெற்று வரும் 7 ஆம் கட்ட அகழாய்வில் அச்சு பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த நாணயங்களைப் பயன்படுத்தி இப்பகுதியின் மக்கள் வட இந்தியாவுடன் வணிகம் செய்துள்ளனர் என்பதை இது குறிக்கிறது.
இந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சந்திரன், சூரியன், காளை, எருது மற்றும் வடிவியல் குறியீடுகள் கீழடியின் மக்கள் வர்த்தகச் சமுதாயத்தினர் என்பதைக் குறிக்கிறது.
அச்சு பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டின் மகாஜனபத காலத்திலிருந்து புழக்கத்தில் இருந்தன.