தமிழக மாநில தொல்லியல் துறையானது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி, கொந்தகை மற்றும் அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியது.
ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளானது தமிழக மாநில தொல்லியல் துறையினால் நடத்தப் பட்டது.
கீழடி என்பது குறைந்தபட்சம் 2,600 வருடங்கள் பழமையான ஒரு நகர்ப்புற குடியிருப்புப் பகுதியாகும்.
இந்த அகழாய்வின் ஏழாம் கட்டத்தின் சிறப்பம்சமானது உறை கிணறுகள் ஆகும்.
இந்த உறை கிணறுகளானது ஊற்றுகள் மற்றும் தண்ணீர் எடுக்கும் கிணறுகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
அகழாய்வுத் தளங்களில் ஒரு திறந்தவெளி அருங்காட்சியகத்தை நிறுவத் திட்டமிட்டுள்ள நிலையில் அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் அந்த இடங்களை மண்ணைக் கொண்டு நிரப்பாமல் அப்படியே விடுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த அருங்காட்சியகமானது அமைக்கப்பட்டால் இது தமிழ்நாட்டின் இது போன்ற முதல்வகை அருங்காட்சியகமாக திகழும்.
இங்கு கண்டெடுக்கப்பட்ட மீன் சின்னம் பொறிக்கப்பட்ட உறை கிணறு மற்றும் இதர சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள், இங்கு வாழ்ந்த மக்கள் நாட்டின் பிற பகுதிகளுடன் (வட இந்தியா) வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர் என்ற கோட்பாட்டினை வலுப்படுத்துகின்றன.