TNPSC Thervupettagam

கீழடி அகழாய்வு

June 11 , 2020 1686 days 3037 0
  • சங்க காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படும் உலை போன்ற ஒரு அமைப்பானது மணலூரில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
  • மனித எலும்புகளைக் கொண்ட முதுமக்கள் தாழியானது கீழடித் தொகுப்பில் உள்ள கொந்தகை கிராமத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
  • ஏற்கெனவே 6 முதுமக்கள் தாழியானது கொந்தகை கிராமத்தில் மார்ச் மாதத்தில் கண்டெடுக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  • கொந்தகையானது கீழடியின் உடல் அடக்கம் செய்யப்படும் இடம் என்று நம்பப் படுகின்றது.
  • மேலும் தொல்லியலாளர்கள் கெடாத வகையில் இருக்கும் விலங்கின் ஒரு முதுகெலும்பையும் கண்டெடுத்துள்ளனர்.

பின்னணி

  • சிவகங்கையில் உள்ள கீழடியில் 6வது கட்ட தொல்லியல் ஆய்வானது மீண்டும் தொடங்கியது.
  • இந்த ஆய்வு கீழடியானது 2600 ஆண்டுகள் அளவிற்குப் பழமையான நாகரிகத்தைக் கொண்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
  • தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையானது கீழடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
  • இந்தக் கீழடித் தொகுப்பானது அதனருகில் உள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.
  • கீழடியானது சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது.
  • முதல் 3 கட்ட அகழாய்வுகள் (2014-15, 2015-16, 2016-18) இந்தியத் தொல்லியல் துறையினால் மேற்கொள்ளப் பட்டன.
  • மாநிலத் தொல்லியல் துறையானது 4வது (2018-19) மற்றும் 5வது (2019) கட்ட அகழாய்வுகளை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்