சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களானது கி. மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 1 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சார்ந்தவை என்று தமிழ்நாடு தொல்பொருள் துறை (Tamil Nadu Archaeology Department-TNAD) தெரிவித்துள்ளது.
‘கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை TNAD வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் முன்பு நம்பப்பட்டதை விட புதிய கண்டுபிடிப்புகள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னரானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
முதல் மூன்று அகழ்வாராய்ச்சிகள் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டன, நான்காவது அகழ்வாராய்ச்சியானது TNAD-ஆல் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் வைகை சமவெளிகளின் இரண்டாவது நகரமயமாக்கலானது கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் கங்கை சமவெளிகளில் நடந்ததைப் போலவே நடந்துள்ளது என்று இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கையானது முன்னர் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட கீழடிக்கு என்பதற்குப் பதிலாக இந்தத் தளத்தை “கீலடி” என்று உச்சரிக்கிறது.
பண்டைய சங்க கால கலாச்சார வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.
தமிழ் பிராமி எழுத்து வடிவம்
அகழ்வாராய்ச்சி நடந்த இடத்திலிருந்து ஐம்பத்தாறு தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கீழடிக் கண்டுபிடிப்புகளானது தமிழ்-பிராமி எழுத்துக்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதை நிர்ணயிக்கின்றன.
கிமு. 6 ஆம் நூற்றாண்டில் இருந்தே உள்ளூர் மக்கள் கல்வியறிவைப் பெற்றிருக்கிறார்கள் அல்லது எழுதும் கலையைக் கற்றுக் கொண்டார்கள் என்பதை இது உறுதிபடுத்துகிறது.
விலங்குகள்
அந்த இடத்தில் காணப்படும் பின்வரும் விலங்குகளின் எலும்புத் துண்டுகள் புனேவில் உள்ள டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அவற்றின் வயது பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன.
இவற்றை கீழடியில் உள்ள சமூகம் விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியது.
கார்பன் வயது கணக்கீடு
அகழ்வாராய்ச்சி நடந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆறு கார்பன் மாதிரிகள் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் மியாமி என்ற இடத்தில் உள்ள பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு ஆசில்லரேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (Accelerator Mass Spectrometry) என்ற முறையின் மூலம், இந்த மாதிரிகளின் வயதைக் கணக்கிடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
353 செ.மீ ஆழத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆறு மாதிரிகளில் ஒன்று அமெரிக்காவிற்கு கார்பன் வயது கணக்கீடு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த முடிவில் இந்த மாதிரிகள் “கிமு 580க்குச் செல்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
கீழடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மட்பாண்ட மாதிரிகள் வேலூர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மூலம் இத்தாலியின் பிசா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.