TNPSC Thervupettagam

கீழடி – வெள்ளி நாணயம்

September 15 , 2021 1074 days 473 0
  • கீழடியிலிருந்து முத்திரை பொறிக்கப்பட்ட சில வெள்ளி நாணயங்கள் சமீபத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
  • இந்த நாணயங்களில் சூரியன், நிலவு, எருது போன்ற ஒரு விலங்கு மற்றும் வடிவியல் வடிவங்கள் போன்றவை பொறிக்கப்பட்டிருந்தன.
  • இந்த நாணயங்கள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என இது பற்றிய ஆய்வுகளில் தெரிய வருகிறது.
  • இது பண்டைய மௌரியப் பேரரசிற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாகும்.
  • கீழடி அகழாய்வுகள், தமிழகத்தில் கி.மு. 600 ஆண்டுகளில் விரிவான கல்வியறிவு பரவியிருந்ததைக் காட்டுகின்றன.
  • எனவே, 2600 ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழகத்தின் பொது மக்களிடம் படிப்பறிவு இருந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்