கீழடியில் அண்மையில் முடிவடைந்த ஐந்தாவது கட்டத் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் சுடுமண் குழாய்கள் புதியதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
இந்தக் குழாய்கள் தமிழ்நாட்டின் பிற அகழ்வாராய்ச்சி இடங்களில் காணப்படும் அனைத்து சுடுமண் குழாய்களைக் காட்டிலும் ‘தனித்துவமானதாக’ அறியப் படுகிறது.
அவை ஒன்றன் மேல் ஒன்றாக கிடைமட்டமாக அடுக்கப் பட்டிருந்தன. எனவே அவை வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.
தொடர்ச்சியாக 10 சுடுமண் குழாய்களை உறுதியாகப் பொருத்துவதன் மூலம் ஒரு குழாய் அமைக்கப் பட்டுள்ளது.
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட குழாய் ஒன்றில் ஒரு மூடி காணப்பட்டது. இது நீரையோ அல்லது வேறு ஏதேனும் திரவத்தையோ வடிகட்டும் சாதனமாக பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
ஊர்வன போன்ற உயிரிகள் உள்ளே நுழைவதைத் தடுக்க இந்த மூடி போன்ற அமைப்பு பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.