பெரும்பாலும் கத்திகள் மற்றும் கோடாரிகள் போன்ற இரும்புக் கருவிகள், கர்னேலியன் மணிகள், பானைகள் மற்றும் கல்லால் ஆன பாக்கு வெட்டிகள் ஆகியவை கீழ்நமண்டியில் உள்ள அகழ்வாராய்ச்சித் தளத்தில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சித் தளத்தில் இரும்புக் காலத்தின் பிற்பகுதியில் மனிதக் குடியிருப்புகள் இருந்ததை இது குறிக்கிறது.
இக்குழு அந்த இடத்தில் 12 செவ்வக வடிவ கல்லால் ஆன சவப்பெட்டிகளையும் கண்டு பிடித்துள்ளது.
இங்கு கறுப்பு சிவப்பு மட்பாண்டம் மற்றும் செம்பூச்சு மட்கலன்கள் அதிக அளவில் கண்டு பிடிக்கப்பட்டதன் மூலம் இந்தத் தளம் இரும்புக் காலத்தைச் சேர்ந்தது எனலாம்.
திருவண்ணாமலையில் உள்ள வந்தவாசி நகரத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் கீழ்நமண்டி அமைந்துள்ளது.