TNPSC Thervupettagam

குஜராத்தில் ரோ-ரோ படகு சேவை

October 23 , 2017 2638 days 1074 0
  • காம்பட் வளைகுடாவிலுள்ள சௌராஷ்டிராவின் கோஹாவிற்கும் தென் குஜராத்தின் தஹேஜ் நகருக்கும் இடையேயான  ரோல் ஆன்-ரோல் ஆப் (ரோ ரோ) எனும் படகு திட்டத்தின் முதல் கட்டப் போக்குவரத்து சேவையை  பிரதமர் தொடக்கிவைத்தார்.
  • இதுதான் தெற்கு ஆசியாவின் முதல் உலகத்தரம் வாய்ந்த ரோ-ரோ படகுப் போக்குவரத்து சேவை ஆகும்.
  • இப்போக்குவரத்து திட்டமானது இரு நகரங்களுக்கிடையேயான பயண நேரத்தை 8 மணியிலிருந்து ஒரு மணிநேரமாக குறைக்கும்.
  • இரு நகரங்களுக்கு இடையேயான நில வழித் தொலைவு 360 km ஆகும். ஆனால் கடல் வழி பயணத்தால் இந்த தொலைவு  31 Km ஆக குறையும்.
  • ரோ-ரோ பயணச் சேவையில், போக்குவரத்து படகானது உட்கட்டப்பட்ட (அல்லது) கரை தாழ்ந்த சாய்வு பாதைகளை உடையதால் படகுகள் துறைமுகங்களில் இருக்கும்போது எளிதாக சரக்குகளை ஏற்றி இறக்க முடியும்.
  • இந்த ரோ-ரோ தொழில்நுட்ப வாகனமானது லோ-லோ வகை வாகனங்களின் செயல்பாட்டிற்கு எதிர்மாறானது. லோ-லோ (life – on and lift out) வகை வாகனங்களில் பளுதூக்கி இயந்திரங்கள் சரக்குகளை ஏற்ற-இறக்கப் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்