மத்திய அரசானது, 2023 ஆம் ஆண்டில் MISHTI (கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் மிக உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்னெடுப்பு) திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் கடற்கரைகளில் சதுப்புநிலக் காடுகளை விரிவுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கடலோரச் சமூகங்கள் மற்றும் கடல் சார் சூழல் அமைப்பின் பாதுகாப்பையும் வளங்காப்பையும் உறுதி செய்கிறது.
இரண்டு ஆண்டுகளில் குஜராத் மாநில அரசானது, இந்த முன்னெடுப்பின் கீழ் 19,000 ஹெக்டேர்களுக்கு மேலான சதுப்புநிலங்களை வெற்றிகரமாக உருவாக்கியது.