TNPSC Thervupettagam

குஜராத் - இந்திய ஓநாய்களின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்கான வரைபடம்

January 7 , 2025 6 days 84 0
  • குஜராத் மாநில அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையானது, அந்த மாநிலத்தில் இந்திய ஓநாய்களின் எண்ணிக்கை 222 ஆக உள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
  • சுமார் 80 என்ற எண்ணிக்கையுடன், பாவ்நகர் மாவட்டம் ஆனது குஜராத்தில் அதிக எண்ணிக்கையிலான ஓநாய்களைக் கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து நர்மதா மாவட்டத்தில் 39, பனஸ்கந்தாவில் 36, சுரேந்திரநகரில் 18, ஜாம்நகர் மற்றும் மோர்பியில் தலா 12, கட்ச் மாவட்டத்தில் 9 என்ற அளவில் ஓநாய்கள் உள்ளன.
  • அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வேலவதாரில் உள்ள பிளாக்பக் (புல்வாய்) தேசியப் பூங்கா மற்றும் தோலேராவைச் சுற்றியுள்ளப் பகுதிகளை உள்ளடக்கிய பாவ் நகரில் உள்ள பால் பகுதியும் அடங்கும்.
  • இந்த வரைபடமானது, அவற்றின் முக்கிய வாழ்விடங்களை இணைக்கும் முக்கியமான 'வழித்தடங்களை' அடையாளம் காண உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்