வதோதரா தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர திரிவேதி, 14வது குஜராத் சட்டமன்றத்தின் சபாநாயகராக பட்ஜெட் தொடரின் முதல் நாளிலேயே ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குஜராத் சட்டசபை அல்லது குஜராத் விதான் சபா ஓரவையை (கீழவை) கொண்ட இந்திய மாநில சட்டசபையாகும். இதன் தலைமையகம் காந்திநகரில் அமைந்துள்ளது.
நடப்பில், 182 உறுப்பினர்களைக் கொண்டது இந்த சட்டமன்றம். இதில் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டவர் (Nominated). மற்றவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.