இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் பாட்னாவின் புல்வாரிஷரிப்பில் உள்ள மகாவீர் புற்றுநோய் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்திய புதிய ஆய்வில், பீகார் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் நிலத்தடி நீரை யுரேனியம் மாசுபடுத்துகிறது என்று கண்டறியப் பட்டுள்ளது.
குடிநீர் விவரக் குறிப்பிற்கான “இந்திய தர நிர்ணயம் ஐஎஸ் 10500: 2012” ஆனது ஆல்பா மற்றும் பீட்டா உமிழ்ப்பான் போன்ற கதிரியக்க எச்சங்களின் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அதிகபட்ச வரம்பினை வரையறை செய்கின்றது.
இந்தியத் தரநிலை நிறுவனத்தின் படி, அனைத்துக் குடிநீர் தரங்களிலும் யுரேனியத்தின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வரம்புவானது 0.03 மி.கி / லிட்டர் (உலகச் சுகாதார அமைப்பின் தற்காலிக வழிகாட்டுதலின்படி) ஆகும்.
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகமானது மத்திய நிலத்தடி நீர் வாரியம் மற்றும் மாநில நிலத்தடி நீர் துறைகளுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங்களில் யுரேனியம் செறிவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.