TNPSC Thervupettagam

குடிநீர் வழங்கீடு பற்றிய உலக சுகாதார அமைப்பின் அறிக்கை

June 13 , 2023 406 days 221 0
  • இந்தியாவில் 'ஹர் கர் ஜல்' திட்டத்தின் பயன்களை உலக சுகாதார அமைப்பின் இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.
  • ஜல் ஜீவன் மிஷன் (JJM) இந்தியர்கள் அனைவருக்கும் குழாய் வழியில் குடிநீர் இணைப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வயிற்றுப் போக்கினால் ஏற்படும் 4,00,000 உயிரிழப்புகளைத் தடுத்தல் என்ற ஒரு பெரும் இலக்கினைப் பூர்த்தி செய்வதில் இது வெற்றி பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • மேலும், இந்த நோய்களுடன் தொடர்பாக ஏற்படும் மோசமான உடல் நிலை, குறைபாடு மற்றும் முன்கூட்டிய இறப்பு ஆகியவற்றால் நிகழும் சுமார் 14 மில்லியன் ஆயுட் காலங்களின் (DALYs) இழப்பினை இது தடுக்கிறது.
  • இந்தச் சாதனை மட்டும் 101 பில்லியன் டாலர் வரையில் மதிப்பிடப்பட்ட செலவினச் சேமிப்பை ஏற்படுத்தும்.
  •  2019 ஆம் ஆண்டில் 3.2 கோடி அல்லது 16.6% ஆக இருந்த குழாய் நீர் இணைப்புகளைப் பெற்றுள்ள கிராமப்புறக் குடும்பங்கள் தற்போது சுமார் 12.3 கோடி அல்லது 62% ஆக உள்ளது.
  • குஜராத், தெலுங்கானா, கோவா, ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள், டாமன் டையூ & தாத்ரா நகர் ஹவேலி மற்றும் புதுச்சேரி ஆகிய 3 ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றில் இந்தத் திட்டமானது முழுமையாக அமலாக்கப் பட்டுள்ளது.
  • இது இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 98.87% ஆகவும், பீகார் மாநிலத்தில் 96.30% ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்