TNPSC Thervupettagam

குடிமக்கள் அறிவியல் தளம்

October 3 , 2018 2246 days 786 0
  • நாட்டில் ஹார்ன்பில் எனும் பறவையை காப்பாற்றுவதற்காகவும் பொதுமக்களிடையே இந்த தனித்துவம் வாய்ந்த பறவையை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் குடிமக்கள் அறிவியல் தளம் என்ற முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த தளமானது இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தைச் (Nature Conservation Foundation) சேர்ந்த அப்ரஜித் தத்தா, ரோகித் நனிவதேகர் மற்றும் ‘கன்சர்வேஷன் இந்தியா’ என்ற அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த ராம்கி ஸ்ரீனிவாசன், விக்ரம் ஹயர்சாவி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
  • நாட்டில் ஹார்ன்பில் எனும் பறவையின் வாழ்விடம் குறித்த தகவல்களை அளிப்பதற்காக இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தியாவில் அனைத்து இடங்களிலும் ஹார்ன்பில் பறவை பற்றிய தகவலை மக்கள் அளிப்பதற்காக ஒரு ஊடாடு இணைய இடைமுக இணையதளமான “ஹார்ன்பில் வாட்ச் முன்முயற்சி” (hornbills.in) என்ற தளம் உதவும்.
  • ஹார்ன்பில் என்ற பறவைகள் “காடுகளின் விவசாயி” என்று அழைக்கப்படுகின்றன. இப்பறவைகள் மரங்களிலிருக்கும் விதைகளை மற்ற இடங்களுக்கு பரவச் செய்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்