1947 ஆம் ஆண்டின் இத்தினத்தன்று சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவில் தில்லியில் உள்ள மெட்கால்ப் இல்லத்தில் முதல் பிரிவு குடிமைப் பணியாளர்களிடம் உரையாற்றினார்.
இவர் குடிமைப் பணியாளர்களை “இந்தியாவின் எஃகுச் சட்டகம்” என்று குறிப்பிட்டார்.
நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையானது இத்தினத்தை அனுசரிக்கின்றது.
இத்தினத்தின் முதலாவது அனுசரிப்பானது 2006 ஆம் ஆண்டில் நிகழ்த்தப் பட்டது.