குடிமைப் பணித் தேர்விற்குத் தயாராகும் தேர்வர்களுக்கான திட்டம்
August 6 , 2023 478 days 277 0
குடிமைப் பணியாளர் தேர்விற்குத் தயாராகும் தேர்வர்கள் சிறந்தப் பயிற்சி வசதிகள் மற்றும் புத்தகங்களைப் பெற உதவச் செய்கின்ற ஒரு திட்டத்தினைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
இந்தத் திட்டமானது 2023-24 ஆம் ஆண்டு மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வோர் ஆண்டும் குடிமைப் பணியாளர் தேர்விற்குத் தயாராகும் 1,000 மாணவர்கள் ஒரு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் படுவர்.
முதல்நிலைத் தேர்விற்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு தலா 7,500 ரூபாய் வழங்கப்படும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஆனது, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து ‘நான் முதல்வன்’ திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.