TNPSC Thervupettagam

குடிமைப் பணியாளர் நாள் - ஏப்ரல் 21

April 21 , 2021 1227 days 1618 0
  • அரசு ஊழியர்களின் முயற்சிகளையும் பணிகளையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அவர்கள், 1947 ஆம் ஆண்டில் டெல்லியின் மெட்கால்ஃப் இல்லத்தில் குடிமைப் பணி அதிகாரிகளுக்கு மத்தியில் வரவேற்புரை ஆற்றினார்.
  • அவர் குடிமைப் பணியாளர்களை ‘இந்தியாவின் எஃகு சட்டகம்’ என்று குறிப்பிட்டார்.
  • அவர் நவீன அகில இந்தியச் சேவைகளின் தந்தை என்று கருதப்படுகிறார்.
  • அகில இந்தியச் சேவைகளானது இந்திய நிர்வாக சேவை, இந்திய வனச் சேவை மற்றும் இந்திய காவல் சேவை ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ் அவர்கள் (1786-93) "இந்தியாவின் சிவில் சேவைகளின் தந்தை" என்று அழைக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்