குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் அல்ஜீரியா, மொரிட்டானியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்திய நாட்டின் அரசத் தலைவர் பயணம் மேற் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
அங்கிருந்த பல்கலைக்கழகங்களின் மையமான சிதி அப்தெல்லா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்திற்கு அவர் பயணம் மேற்கொண்ட போது அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அல்ஜீரியாவின் ஜார்டின் டி'ஸ்ஸாயில் உள்ள ஹம்மா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா முனையினையும் அவர் திறந்து வைத்தார்.
முர்முவின் வருகை என்பது இந்தியாவிற்கும் மலாவிக்கும் இடையிலான அரசுமுறை உறவுகளின் 60வது ஆண்டு நிறைவுடன் ஒன்றி வருகிறது.