TNPSC Thervupettagam

குடியரசு தினம் – ஜனவரி 26

January 29 , 2019 2127 days 1019 0
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா தனது 70-வது குடியரசு தினத்தைக் கொண்டாடியது.
  • இந்த தினமானது இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த தினமான 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியை கௌரவிக்கிறது. இது இந்தியாவின் ஆளும் ஆவணமாக இருந்த இந்திய அரசுச் சட்டம் 1935-ஐ மாற்றியது.
  • இந்தியாவின் 70-வது குடியரசின் தலைமை விருந்தினர் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோஸா ஆவார்.
  • குடியரசு தினத்தின் தலைமை விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும்.
  • இதற்கு முன் 1995 ஆம் ஆண்டில் மறைந்த நெல்சன் மண்டேலா குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
குடியரசு தினம் - முதன்மைகள்
  • இந்திய தேசிய இராணுவத்தின் முன்னாள் வீரர்களான
    • பரமானந்த்
    • லால்டி ராம்
    • ஹீரா சிங்
    • பஹ்மால்
  • ஆகியோர் "முன்னாள் இராணுவ வீரர்கள் : தேச வளர்ச்சியின் உந்து சக்திகள்" என்ற கருத்துருவுடன் பங்கேற்றனர். 90 வயதை நிரம்பிய இவர்கள் அனைவரும் குடியரசு தின அணி வகுப்பில் முதன்முறையாக கலந்து கொண்டனர்.
  • இந்திய வரலாற்றில் முதன்முறையாக தளபதி குஷ்பு கன்வார் தலைமையிலான "நாரி சக்தி" என்ற அனைத்து மகளிர் படைப் பிரிவானது அஸ்ஸாம் படைப்பிரிவு அணிவகுப்பாக காட்சிப்படுத்தப்பட்டது.
  • குடியரசு தின அணிவகுப்பில் அனைத்து ஆண்கள் இராணுவ படைப்பிரிவை வழி நடத்திய முதலாவது பெண் அதிகாரியாக லெப்டினன்ட் பாவனா கஸ்தூரி உருவெடுத்துள்ளார்.
  • சமிக்ஞை படைப் பிரிவைச் சேர்ந்த கேப்டன் சிக்கா சூராபாய் இரு சக்கர வாகன சாகசங்களை நிகழ்த்திய முதலாவது பெண் வீரராக உருவெடுத்துள்ளார். மேலும் அவர் தனது ஆண்கள் அணியினருடன் டேர் டெவில் அணியிலும் ஒரு பகுதியாக இணைந்துள்ளார்.
  • குடியரசு தின அணிவகுப்பின் போது முதன்முறையாக, ஜெட் எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் கலவைகளைப் பயன்படுத்தி இந்திய விமானப் படை விமான சாகங்களை நிகழ்த்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்