TNPSC Thervupettagam

குடியரசு தின அணிவகுப்பு 2025

December 24 , 2024 3 days 62 0
  • அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பிற்காக 15 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் அணிவகுப்பு காட்சி வாகனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • டெல்லி மாநில அரசின் அணிவகுப்பு காட்சி வாகனத்திற்கான முன்மொழிவு ஆனது, நான்காவது ஆண்டாக நிபுணர் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
  • மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கவில்லை அதே நேரத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் அணிவகுப்பு காட்சி வாகனங்களுக்கான தேர்வில் பங்கேற்கவில்லை.
  • 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மூன்று ஆண்டு ஒப்பந்தம் கையொப்பமிடப் பட்ட நிலையில் இதன் படி ஒவ்வொரு மாநிலமும் ஒன்றியப் பிரதேசமும் இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறையாவது தனது காட்சி வாகனங்களை காட்சிப் படுத்துவதற்கு வாய்ப்பினைப் பெறும்.
  • இருபது ஆண்டுகளில் டெல்லி ஏழு முறை அணிவகுப்பு காட்சி வாகனங்களை காட்சிப் படுத்தியதோடு குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியவை அவற்றின் அணிவகுப்பு காட்சி வாகனங்களைக் காட்சிப் படுத்துவதற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்