TNPSC Thervupettagam

குடியரசு தின சிறப்பு காட்சிப் பரிசு

January 30 , 2018 2393 days 786 0
  • நாட்டின் 69-வது குடியரசு தின அணிவகுப்பின் சிறந்த அணிவகுப்புக் காட்சி   விருதினை (Best tableau  Award) மகாராஷ்டிரா மாநில கலைஞர்களுக்கு டெல்லி இராணுவக் குடியிருப்பிலுள்ள (Cantonment) கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் வழங்கியுள்ளார்.
  • “மகாராஜா  சத்ரபதி சிவாஜியின்  முடிசூடல் விழா” என்ற தலைப்பில் மகாராஷ்டிரா கலைஞர்கள் காட்சி அணிவகுப்பை மேற்கொண்டனர்.
  • மாநிலத்தின் பாரம்பரிய தலைப்பாகை, முகமூடிகள் மற்றும் சாஸ்திரங்களை (Masks and Sastras) பிரதிபலிக்கும் வகையில் அஸ்ஸாம் கலைஞர்கள் மேற்கொண்ட காட்சி அணிவகுப்பு இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
  • முப்படைகளுக்கிடையே  சிறந்த அணிவகுப்பை புரியும் படைப் பிரிவிற்கான விருது (Best Marching Contigent)   பஞ்சாப் ரெஜிமென்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • துணை இராணுவப் படைகளுக்கிடையே சிறந்த அணிவகுப்பு புரியும் படைப் பிரிவிற்கான விருது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படைக்கு (ITBP – Indo-Tibetan Border Police) வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளினுடைய காட்சி அணிவகுப்பில், மத்திய விளையாட்டு மற்றும் இளையோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் விளையாடு இந்தியாவினுடைய (Khelo India – கேலோ இந்தியா) கருப்பொருளின் அடிப்படையில் நடத்தப்பட்ட காட்சி அணிவகுப்பிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வகைப்பிரிவு விருதுகள்

  • மாணவர்கள் வகைப்பிரிவில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் நடனமான பரேடி (Baredi Dance) நடனத்தை புரிந்தமைக்காக, நாக்பூரிலுள்ள தெற்கு-மத்திய மண்டல கலாச்சார மையத்திற்கு (South Central Zone Cultural Centre) முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • திரிபுரா மாநில நடனமான ஷாங்ராய் மோக் (Shangrai mog) நடனத்தையும், ஷிக் ஷித் பாரத் மற்றும் ஷாஷக்த் பாரத் நடனத்தையும் புரிந்தமைக்காக ஆறுதல் பரிசுகள் முறையே நாகாலாந்தின் திமாபூரிலுள்ள (Dimapur) வடகிழக்கு மண்டல கலாச்சார மையத்திற்கும் (The North East Zone Cultural Centre), டெல்லியின் ஆக்ஸ்போர்டு பவுண்டேஷன் பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்