நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத்தலைவராக வெங்கையா நாயுடு (68) 10.08.2017 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் குடியரசு துணைத்தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்கும் விழா நடைபெற்றது. இதில், வெங்கையா நாயுடுவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
வெங்கய்ய நாயுடு, இந்தியாவின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவர் ஆவார். அந்தப் பதவியை வகிக்கும் 13-ஆவது நபர் எனும் பெருமையையும் அவர் பெறுகிறார். மேலும் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த ஒருவர் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் என்ற முறையில், மாநிலங்களவைக்கும் வெங்கையா நாயுடு தலைவராகிறார்.