குடியிருப்பு அடிப்படையிலான ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
February 1 , 2025 26 days 61 0
தமது மாநில ஒதுக்கீட்டிற்குள் முதுகலை (PG) மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான குடியிருப்பு அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அரசியலமைப்பின் கீழ், இது அனைவருக்கும் ஒரு குடியுரிமை மற்றும் ஒரு சமத்துவ உரிமை ஆகிய கருத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
MBBS படிப்புகளுக்கு நியாயமான அளவிற்கு குடியிருப்பு அடிப்படையிலான இட ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நீதிமன்றம் அங்கீகரித்து உள்ளது.
மாநில அரசுகள் ஆனது, ‘வசிப்பிடம்’ என்பதை ஒரு 'குடியிருப்பு' என்பதற்கு ஒத்ததாக எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
சட்டப்பூர்வமாக, ‘வசிப்பிடம்’ என்பது ஒரு தனிநபரின் 'குடியிருப்பு' என்று பொருளல்ல.
பிராந்திய அல்லது மாகாண குடியிருப்பு என்ற கருத்துரு ஆனது இந்தியச் சட்ட அமைப்புக்கு அந்நியமானது.
நிரந்தரக் குடியிருப்பு அல்லது குடியிருப்பு என்பது 'வசிப்பிடம்' என்பதிலிருந்து மிகவும் வேறுபட்ட ஒரு பொருளைக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு பொதுவாக 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்தி வருகிறது.
இது தமிழக மாநிலத்தினைச் சேர்ந்த அல்லது மாநிலத்தில் பிறந்த மாணவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்குகிறது.
முதுகலை மருத்துவப் படிப்புகளில் (MD/MS/Diploma), தமிழ்நாட்டில் மொத்தமாக 2,294 இடங்கள் உள்ளன.
இதில், 50% இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் சுமார் 1,200 மாணவர்கள் பயனடைகின்றனர்.