குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை
May 25 , 2024 186 days 206 0
2019 ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 300க்கும் மேற்பட்டவர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
டெல்லியில் சான்றிதழ் பெற்ற 14 பேர் 2013 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
இந்தியாவிற்குள் சட்டப்பூர்வமாக நுழைந்த பெரும்பாலான பாகிஸ்தானிய இந்துக்கள் குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லியில் வசிக்கின்றனர்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மாதுவாக்கள் மற்றும் நமசுத்ராக்கள் மற்றும் அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் (NRC) இருந்து விலக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரங்கள் தெரியவில்லை.
குடியுரிமை இணைய தளமானது, விண்ணப்பதாரர்கள் பிறந்த நாடு குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் வங்காளதேசம், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் தங்கள் தோற்றுருவினைக் கண்டறியும் ஒரு ஆவணத்தையாவது சமர்ப்பிக்க வேண்டும் என கோருகிறது.
மேற்கு வங்காளத்தில் உள்ள பயனாளிகள் எந்த ஆவணமும் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்ததால், அவர்களால் இந்தச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது.
மார்ச் 11 ஆம் தேதியன்று, 2024 ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்த விதிகளின் அமலாக்கத்தினை உள்துறை அமைச்சகம் அறிவித்தது என்ற நிலையில், இது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை செயல்படுத்த உதவியது.
இந்தச் சட்டமானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப் பட்டது.