மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) விதிகளை சமீபத்தில் அறிவித்தது.
நாடு முழுவதிலும் இந்தச் சட்டத்தினை அமலாக்குவதற்கு இது வழி வகுக்கிறது.
2024 ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்தம்) விதிகள் என அழைக்கப்படும் இந்த விதிகள் ஆனது, 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் தகுதி பெற்ற நபர்கள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க உதவும்.
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் இந்து, சீக்கிய, சமண, புத்த, கிறிஸ்தவ மற்றும் பாரசீக அகதிகள் இந்தியக் குடியுரிமையினைப் பெறுவதை இந்தச் சட்டம் எளிதாக்குகிறது.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக இந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கச் செய்வதை இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் CAA நிறைவேற்றப்பட்டு, அதன்பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.