TNPSC Thervupettagam

குடும்பச் செலவினம் குறித்த கணக்கெடுப்பு 2023-2024

December 29 , 2024 24 days 92 0
  • மத்தியப் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது (MoSPI), 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் வீட்டு/குடும்பச் செலவினங்கள் குறித்து இரண்டு தொடர்ச்சியான கணக்கெடுப்புகளை மேற்கொண்டது.
  • 2023-24 ஆம் ஆண்டில், இந்தியாவின் கிராமப்புற மக்களில் அடிமட்டத்தில் உள்ள 5% மக்களுக்கான சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவினம் (MPCE) 1,677 ரூபாய் ஆகும்.
  • நகர்ப்புறங்களில் அதே பிரிவினருக்கு இந்தச் செலவினம் 2,376 ரூபாய் என்ற அளவில் அதிகமாக உள்ளது.
  • மறுபுறம், இந்தியாவின் கிராமப்புற மக்கள் தொகையில் மேல் மட்டத்தில் உள்ள 5% பேர் சராசரியாக சுமார் 10,137 ரூபாய் செலவழிக்கிறார்கள் என்ற ஒரு நிலையில் இது நகர்ப்புறங்களின் அதே பிரிவினரில் 20,310 ரூபாயாக உள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் இருந்ததை விட 22% அதிகரிப்புடன், இந்தியாவின் கிராமப்புற மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள சுமார் 5% மக்களின் MPCE செலவினத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
  • நகர்ப்புறங்களில் உள்ள அதே குழுவினரில், இந்த வளர்ச்சி சற்று குறைவாக 19% ஆக இருந்தது.
  • நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் உணவு சாராதப் பொருட்களுக்கு அதிக செலவு செய்கின்றனர்.
  • இந்தச் செலவுகள் கிராமப்புறங்களில் சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவில் (MPCE) 53% ஆகவும் மற்றும் நகர்ப்புறங்களில் 60% ஆகவும் உள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் இந்த உணவு சாராதச் செலவினங்களைத் தூண்டும் முக்கியப் பிரிவுகள்:
    • போக்குவரத்து,
    • உடை, படுக்கை மற்றும் காலணி,
    • பொழுதுபோக்கு மற்றும் இதரப் பொருட்கள், மற்றும்
    • நீடித்துப் பயன்படுத்தப்படும் பொருட்கள்.
  • நகர்ப்புறங்களில், உணவு சாராதச் செலவினங்களில் சுமார் 7% பங்குடன் வாடகையும் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்