ஹங்கேரி அரசு அதிகக் குழந்தைகளுடன் கூடிய குடும்பங்களுக்கு மிகப் பெருமளவில் நிதி உதவிகளையும் மானியங்களையும் உயர்த்தியிருக்கின்றது.
இந்த அறிவிப்பு பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதற்காகவும் குறைந்துக் கொண்டு வரும் ஹங்கேரியின் மக்கள்தொகையை அதிகப்படுத்துவதற்காகவும் வேண்டி அறிவிக்கப்பட்டது.
நிதிச் சலுகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது
குறைந்தது 4 குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதுமான தனிநபர் வருமானவரி விலக்கு.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஏழு இருக்கை கொண்ட வாகனத்தை வாங்குவதற்காக 8825 டாலர்கள் மானிய உதவி.
முதல்முறையாக 40 வயதிற்கு உள்ளாக திருமணம் செய்யும் பெண்களுக்கு 35300 டாலர்களுக்கு குறைந்த வட்டியிலான கடன்.