TNPSC Thervupettagam

குதிக்கும் சிலந்திகளின் புதிய இனங்கள்

December 29 , 2023 203 days 177 0
  • அஃப்ராஃப்ளாசில்லா பேரினத்தைச் சேர்ந்த குதிக்கும் சிலந்திகளின் இரண்டு புதிய வகைகளை ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.
  • இந்தப் பேரினத்தைச் சேர்ந்த மூன்று இனங்கள் மட்டுமே இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டன.
  • அஃப்ராஃப்ளாசில்லா கேரளா என்ற இனத்தின் மாதிரிகள் இரிஞ்சாலக்குடா மற்றும் குட்டநாடு ஆகியப் பகுதிகளில் காணப்பட்டன.
  • அஃப்ராஃப்ளாசில்லா அதவத்துரென்சிஸ் திருச்சிராப்பள்ளியில் உள்ள அதவத்தூரில் கண்டறியப்பட்டது.
  • அஃப்ராஃப்ளாசில்லா பேரினத்தைச் சேர்ந்த குதிக்கும் சிலந்தி இனங்கள், ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரையிலான பகுதிகளில் பல்வேறு அறியப் பட்ட இனங்களுடன் இணைந்து காணப்படுகின்றன.
  • சமீபத்திய கண்டுபிடிப்புகள் ஆனது ராஜஸ்தான், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்தப் பேரினம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன.
  • இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் மூலம், அறியப்பட்ட அஃப்ராஃப்ளாசில்லா இனங்களின் எண்ணிக்கையானது 47 ஆக உயர்ந்துள்ளது, அதில் ஆப்பிரிக்காவில் அதிகபட்சமாக 19 இனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்