TNPSC Thervupettagam

குதிக்கும் சிலந்திகளின் புதிய இனம்

November 1 , 2024 22 days 53 0
  • தென்னிந்தியா முழுவதும் காணப்படும் 'தென்கானா' என்ற குதிக்கும் சிலந்திகளின் ஒரு புதிய இனத்தை சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்ற நிலையில் இது முன்னர் அறியப்பட்ட இரண்டு இனங்களை உள்ளடக்கியதாகும்.
  • கர்நாடகாவில் தென்கனா ஜெயமங்கலி என்ற புதிய இனத்தையும் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் புதிய குழுவானது குதிக்கும் சிலந்திகளின் ப்ளெக்ஸிப்பினா என்ற ஒருதுணைப் பிரிவைச் சேர்ந்தது.
  • ஆனால் இது ஹைலஸ் மற்றும் டெலமோனியா போன்ற இதனுடன் தொடர்புடையக் குழுக்களில் இருந்து வேறுபட்டதாகும்.
  • முன்னதாக கொலோப்சஸ் பேரினத்தில் இடம் பெற்ற இரண்டு இனங்கள் தற்போது புதிய பேரினத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
  • அவை தென்கனா மனு (தென் இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படுகிறது) மற்றும் தென்கனா அர்காவதி (கர்நாடகாவில் காணப்படுகிறது) ஆகியனவாகும்.
  • முதன்முறையாக தென்கன ஜெயமங்கலி, கர்நாடகாவில் உள்ள ஜெயமங்கலி நதியின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்