இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) நிறுவனம் மற்றும் ஒடிசா மாநில வனத்துறை ஆகியவை ஓடிஸா மாநிலத்தின் கடற்கரையோரங்களில் காணப்படும் குதிரைலாட நண்டுகளுக்கு அடையாளமிடும் செயல்முறையினைத் தொடங்குவதற்காக வேண்டி கைகோர்த்துள்ளன.
அதன் வளங்காப்பு மற்றும் மேலாண்மைக்காக அவற்றின் எண்ணிக்கை மற்றும் வாழ்விடப் பயன்பாட்டைப் புரிந்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
குதிரைலாட நண்டுகள் பூமியில் வாழும் பழமையான உயிரினங்களில் ஒன்றாகும், என்பதோடு அவை மருத்துவ ரீதியாகவும் மிக மதிப்புமிக்க இனமாகும்.
இந்தியாவில் இரண்டு வகையான குதிரைலாட நண்டு இனங்கள் உள்ளன; அவை - டச்சிப்ளஸ் கிகாஸ் மற்றும் கார்சினோஸ்கார்பியஸ் ரோட்டுண்டிகாடா (சதுப்புநிலம்) ஆகியனவாகும்.
குதிரை லாட நண்டுகள், 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான 2வது பட்டியலில் இடம் பெற்றுள்ள இனமாகும்.