சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படும் இந்த குகை ஓவியங்கள் கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கியமான பாறைக் கலைகளில் ஒன்றாகும்.
வெள்ளை நிறமிகளால் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் யானை, தேர் (சிலர் மயில் என்று கூறுகிறார்கள்) மற்றும் இந்தப் பகுதியின் ஆரம்ப கால மக்களின் வாழ்க்கை ஆகியவற்றைச் சித்தரிக்கிறது.
தேர் போன்ற தோற்றம் கொண்ட ஓவியங்கள், மனித உருவங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றின் ஓவியங்கள் இந்தக் குகையில் காணப்படுகின்றன என்பதோடு இந்தப் பகுதியின் வரலாற்றுக்கு முந்தைய மக்களின் வாழ்க்கை குறித்த சாட்சியங்கள், அவர்களின் வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவையும் இங்கு காணப் படுகின்றன.
இந்தக் குகையில் சிறு குழிகள் மற்றும் துளைகள் காணப்படுகின்றன என்ற நிலையில் அவை தண்ணீர் மற்றும் பிற பொருட்களைச் சேமிக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப் படுகிறது.
இதே போன்ற பாறை ஓவியங்கள் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே அமைந்துள்ள வெள்ளருக்கம் பாளையம், விராலியூர் மற்றும் கோவனூர் ஆகிய இடங்களில் காணப் படும் மலை உச்சிகளில் காணப்படுகின்றன.