தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முதன்மையான நகராட்சி அமைப்பான கும்பகோணம் நகராட்சி திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது.
கடந்த சில வருடங்களாக சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்பட்ட திடக்கழிவுகளில் 2 லட்சம் டன்கள் என்ற அளவிற்கு மறுசுழற்சி செய்து நாட்டின் முதல் நகராட்சியாக கும்பகோணம் நகராட்சி உருவெடுத்துள்ளது.
இந்த மாதிரி சுவச் பாரத் திட்டத்தில் உள்ள சமநிலை மாதிரியையும் உள்ளடக்கியதாகும்.
திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக ஜிக்மா குளோபல் என்வரோன் சொல்யூசன்ஸ் என்ற தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டது.