யுனெஸ்கோ அமைப்பின் கீழ் உள்ள தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரியங்களின் பாதுகாப்பிற்கான அரசுகளுக்கு இடையேயான குழு தென்கொரியாவின் ஜேஜீ நகரில் நடைபெற்ற தன்னுடைய 12-வது கூட்டத்தில் மனித குலத்தின் தொட்டுணரமுடியாத கலாச்சார பாரம்பரிய பிரதிநிதித்துவ பட்டியலில் (Representative List of Intangible Cultural Heritage of Humanity) “கும்பமேளாவை” சேர்த்துள்ளது.
ஹரித்துவார், அலகாபாத், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய நான்கு இடங்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கும்பமேளாவை “பூமியில் உலகிலேயே அதிகமான புனித யாத்திரிகர்கள் பங்கு பெறும் அமைதியான கூடுகை” என யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
யோகா மற்றும் நவ்ரோஸ் ஆகிய இரண்டினிற்கு அடுத்து, இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து கும்பமேளா மூன்றாவதாக இப்பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.
தெற்கு இத்தாலியின் நேப்பிள் பகுதியில் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்து கொண்டு வரப்பட்டிருக்கும் பிட்சா சுழற்றுதல் தயாரிப்பு கலையும் யுனெஸ்கோவின் தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரிய பிரதிநிதித்துவ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.