TNPSC Thervupettagam

குயிபு மாபெரும் திரளமைப்பு

February 12 , 2025 11 days 72 0
  • அறியப்பட்ட பேரண்டத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் திரளமைப்பை வானியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்த மாபெரும் திரளமைப்பிற்கு "குயிபு" என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது வியக்கத்தக்க வகையில் தோராயமாக சுமார் 1.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிற்கு நீண்டுள்ளதோடு இதில் மதிப்பிடப்பட்ட 200 குவாட்ரில்லியன் சூரிய நிறைகளையும் கொண்டுள்ளது.
  • குயிபுவின் மாபெரும் அளவானது பால் வெளி அண்டத்தின் நீளத்தை விட 13,000 மடங்கு அதிகமாகும்.
  • இது பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிக நீளமான திரளமைப்பு ஆகும் என்பதோடு மேலும் இது லானியாக்கியா மீத்திரள்  போன்ற முந்தைய மாபெரும் திரளமைப்புகளை விஞ்சி உள்ளது.
  • ஷேப்லி மீத்திரளமைப்பு, செர்பென்ஸ்-கொரோனா போரியாலிஸ் மீத்திரளமைப்பு, ஹெர்குலஸ் மீத்திரளமைப்பு மற்றும் ஸ்கல்ப்டர்-பெகாசஸ் மீத்திரளமைப்பு ஆகிய நான்கு பெரிய மீத்திரளமைப்புகள் இதனுடன் சேர்த்து கண்டுபிடிக்கப் பட்டன.
  • இந்த ஐந்து மீத்திரளமைப்புகளும் சேர்ந்து அண்டத் திரல்களில் 45 சதவீதத்தையும், அண்டத்தில் சுமார் 30 சதவீதத்தையும், பேரண்டத்தில் உள்ள பருப்பொருளில் 25 சதவீதத்தையும் கொண்டுள்ளன.
  • அவை பேரண்டத்தின் அளவில் தோராயமாக 13 சதவீதத்தை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்