உலக சுகாதார வலையமைப்பானது (WHN) குரங்கு அம்மை நோய்ப் பரவலைப் பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
இந்தப் பெருந்தொற்றானது ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு உள்ளே மட்டும் பரவ வில்லை என்பதையும், இந்தச் சமூகப் பரவலைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் தேவை என்பதையும் இது குறிக்கிறது.
உலக சுகாதார வலையமைப்பு என்பது கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அறிவியலாளர்களை உள்ளடக்கிய ஒரு சுயாதீனமானக் கூட்டணியாகும்.
பொது சுகாதார அவசரநிலைப் பிரகடனம் என்பது உலகளாவிய எச்சரிக்கையின் மிக உயர்ந்த நிலையாகும்.
தற்போது இது கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் போலியோவிற்கு மட்டுமே பொருந்தும்.