TNPSC Thervupettagam

குரல் மீளுருவாக்கத் தொழில்நுட்பம்

May 4 , 2024 204 days 225 0
  • கௌகாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குரல் நாண் அதிர்வு சமிக்ஞைகளிலிருந்து நேரடியாக மனித பேச்சு/குரல் சமிக்ஞைகளை உருவாக்குவதற்கான "LOQU" என்ற ஒரு புதிய முறையினை உருவாக்கி உள்ளனர்.
  • இந்த நுட்பத்தில் தொண்டையின் மேல் வைக்கப்பட்டுள்ள பல்வேறு உணர்விகளைப் பயன்படுத்தி, உட்செலுத்துதல் நடைமுறைகள் இல்லாமல் குரல்வளை மடிப்பு (நாண்) இயக்கத்தை ஆய்வு செய்ய முடியும்.
  • பேசும் போது, ​​உள்ளார்ந்த குரல்வளை தசை இயக்கம் காரணமாக குரல் மடிப்புகள் அதிர்வுறும்.
  • உணர்வியக்கமின்மை (அப்ராக்ஸியா) பாதிப்பினால் ஏற்படும் பிறழ்வு போன்ற சில சந்தர்ப்பங்களில், சிலருக்கு ஒலி உற்பத்தி இல்லாமல் சாதாரண குரல் மடிப்பு அதிர்வு நிகழலாம்.
  • மேற்கண்ட குறைபாட்டிற்கு, குரல் நாண் அதிர்வுகளிலிருந்துப் பேச்சு சமிக்ஞைகளை மீளுருவாக்குவதற்கு LOQU என்பதினைப் பயன்படுத்த முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்