TNPSC Thervupettagam

குருட்டு மீன் – மேகாலயக் குகைகள்

January 4 , 2018 2388 days 823 0
  • மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜெயிந்தியா மலைப்பகுதி மாவட்டத்திலுள்ள குகைகளின் உட்பகுதியில் புதிய குருட்டு மீன் இனம் (Blind Fish) இனம் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • லார்கெட் (Larket) எனும் கிராமத்திலுள்ள குகைகளில் இம்மீன் கண்டுபிடிக்கப்பட்டதாலும், அக்கிராம மக்கள் இம்மீன்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதற்காகவும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இக்குருட்டு மீன் இனத்திற்கு அக்கிராமத்தின் பெயர் கொண்டு “ஸ்கிஸ்துரா லர்கெட்டன்சிஸ்” (Schistura larketensis) என விலங்கியல் பெயரிடப்பட்டுள்ளது.
  • குகைகளின் நிரந்தர இருளில் வாழ்வதால் இம்மீன்கள் தன்னுடைய பார்வைத் திறனை இழந்து விட்டன.
  • இருள் நிறைந்த இடங்களிலுள்ள நீர்ப்பகுதிகளில் தன்னுடைய வாழ்விடத்தை இவை அமைக்கும் போதும் இவை தன்னுடைய பார்வை நிறமிகளை இழப்பதால் இவை குருடு நிலையை அடைகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்