TNPSC Thervupettagam

குருத்தணு சிகிச்சை

September 7 , 2023 319 days 180 0
  • மதியிறுக்க கோளாறு (ASD) உள்ள இரண்டு குழந்தைகளின் சிகிச்சைக்காக குருத்தணு சிகிச்சையினை மேற்கொள்வதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
  • தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியத்தின் (EMRB) பரிந்துரையை எதிர்த்து இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.
  • முன்னதாக மதியிறுக்க கோளாறுக்கு குருத்தணு சிகிச்சையைப் பயன்படுத்தக் கூடாது என்று அந்த வாரியம் பரிந்துரைத்தது.
  • குருத்தணு செல்கள் என்பது மற்ற அனைத்துச் சிறப்புச் செயல்பாடுகள் கொண்ட செல்களை உருவாக்கும் செல்களாகும்.
  • குருத்தணு செல்களின் மீளுருவாக்கப் பண்புகள் ஆனது அவற்றை மருத்துவத் துறையில் மிகவும் மதிப்புமிக்கதாக மாற்றுகின்றன.
  • அதனால் தான் குருத்தணு சிகிச்சைகள் மீளுருவாக்க மருந்து என்றும் அழைக்கப் படுகின்றன.
  • மதியிறுக்க கோளாறு என்பது பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றவர்களுடன் கருத்துப் பரிமாற்றம், தகவல் தொடர்பு, கற்றல் மற்றும் நடத்தை ஆகியவற்றினைப் பாதிக்கும் ஒரு நரம்பியல் மற்றும் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்