TNPSC Thervupettagam

குரு கோபிந்சிங் ஜெயந்தி – ஜனவரி 5

January 5 , 2018 2514 days 778 0
  • 10-வது மற்றும் கடைசி சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங்-கின் 351 வது பிறந்த நாள் ஜனவரி 5ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
  • 10-வது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங் சீக்கிய குருவாக தன் 9-வது வயதில் முறையாக பொறுப்பேற்றார்.
  • 1699-ல் இவர் கல்சா (Khalsa) எனும் சீக்கிய போராளிகள் சமூகத்தை (Sikh warrior Community) இவர் நிறுவினார்.
  • மேலும் சீக்கியத்தில் ஐந்து அம்ச நெறிமுறையை (Five K’S/கே – நெறி முறைகள்) இவர் அறிமுகப்படுப்படுத்தினார். இந்த ஐந்து “கே“ – நெறிமுறையானது குரு கோபிந்த் சிங்-கினால் கல்சா சீக்கிய சமூகத்தினர் அனைவரும் பின்வரும் ஐந்து அம்சங்களை அனைத்து காலங்களிலும் அணிய வேண்டி வழங்கப்பட்ட உத்தரவாகும்.

Five K’S

1 கேஷ் (Kesh) திருத்தாத முடி (Uncut Hair)
2 கங்கா (Kangha) மரச்சீப்பு
3 காரா (Kara) மணிக்கட்டில் அணியும் இரும்பு அல்லது எஃகு கை அட்டிகை (Bracelet)
4 கிர்பன் (Kirpan) வாள் அல்லது குத்துவாள்
5 கச்சேரா (Kacchera) சிறிய கால்சட்டை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்