குரூப் 4 மற்றும் விஏஓ (VAO) எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு இனி ஒரே தேர்வு நடத்தி பின்னர் கலந்தாய்வு மூலம் விரும்பும் பணி வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப் 4ன் பல்வேறு பதவிகளுக்கும், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே ஆகும்.
இரு தேர்வுகளையும் தனித்தனியே நடத்தும்போது ஒவ்வொரு தேர்வுக்கும் சுமார் ரூ.15 கோடி வரை செலவாகிறது. இதனால் பணம், மனிதவளம், கால விரயமும் கூடுதலாக ஏற்படுகிறது.