கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறத்தியறையில் உள்ள முற்காலப் பாண்டியர் கால குடைவரைக் கோவிலைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக தமிழக அரசு அறிவிக்க உள்ளது.
பாண்டியர் காலத்தினைச் சேர்ந்த 10 கோவில்களில் குறத்தியறையில் உள்ள இந்தக் கோவிலும் ஒன்றாகும்.
இந்தக் கோவிலின் தெய்வத்தினைச் சங்க காலக் கவிஞரான ஔவையார் அம்மன் என உள்ளூர்வாசிகள் தொடர்ந்து வழிபடுகின்றனர்.
ஆனால், கவிஞரும் கல்வெட்டு ஆய்வு அறிஞருமான கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், இது பாறையில் செதுக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் உருவம் என்று எழுதியுள்ளார்.