கேரள மாநில அரசானது மனித-விலங்கு மோதலை குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த ஒரு பேரிடராக அறிவித்து, இத்தகைய அறிவிப்பினை வெளியிட்ட முதலாவது இந்திய மாநிலமாக மாறியுள்ளது.
தற்போது, மனித-விலங்கு மோதலை மேலாண்மை செய்வது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் படி செயல்படுகின்ற வனத்துறையின் பொறுப்பாகும்.
இப்பிரச்சினை குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்பட்டவுடன், அதை எதிர்கொள்ளும் பொறுப்பு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு மாற்றப் படும்.
இதற்கு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தீர்வு வழங்கப்படும் என்பதால் இதன் மூலம் அவர்கள் விரைவாகவும் தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்க முடியும்.
மாவட்டப் பேரிடர் அமைப்பின் தலைவர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக இந்த நடவடிக்கைகளில் தலையிடலாம்.
2015 ஆம் ஆண்டில், ஒடிசா பாம்புக் கடியை குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவித்தது.
2020 ஆம் ஆண்டில், கேரளா கோவிட் பெருந்தொற்றினை குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவித்தது.
இது தவிர, 2019 ஆம் ஆண்டில் வெப்ப அலைகள், வெங்குரு மற்றும் வெப்பத் தாக்கம் ஆகியவையும், 2017 ஆம் ஆண்டில் நிலத்தடியில் குழிவுகள் உருவாதல் நிகழ்வு மற்றும் 2015 ஆம் ஆண்டில் மின்னல் மற்றும் கடல் கரையோர அரிப்பு ஆகியவையும் ஒரு குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப் பட்டுள்ளன.