குறுகிய தூர வரம்புடைய கடற்படைக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை (NASM-SR)
December 9 , 2023 353 days 191 0
இந்தியக் கடற்படையானது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து, சீ கிங் 42B என்ற ஹெலிகாப்டரில் இருந்து உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட குறுகிய தூர வரம்புடைய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் (NASM-SR) வழிகாட்டுதலுடன் கூடிய சோதனைகளை சமீபத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டது.
இந்தியக் கடற்படைக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, வான்வழியாக ஏவப்படக் கூடிய முதல் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை இதுவாகும்.
இந்த ஏவுகணை தற்போது கடற்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் சீ ஈகிள் என்ற ஏவுகணைகளுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும்.
NASM-SR என்ற ஏவுகணையானது கடல் மட்டத்திலிருந்து வெறும் 5 மீட்டர் உயரத்தில் பயணிக்கக் கூடியது.
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளின் இந்த தாழ்மட்டச் செயல்பாடுகள் திறன் ஆனது கடல்சார் பகுதியில் ரேடார் மற்றும் அகச்சிவப்பு கண்டறிதல் நுட்பங்களில் இருந்து தப்பித்தல் திறன் (sea skimming) என்று அழைக்கப்படுகிறது.