பிஎஸ்என்எல் ஆனது ஸ்கைலோவுடன் (Skylo) இணைந்து இந்தியாவில் உலகின் முதலாவது செயற்கைக் கோளை அடிப்படையாகக் கொண்ட குறுகிய பட்டை இணையப் பொருட்கள் (IOT - internet of things) என்ற அமைப்பை அறிமுகப் படுத்தி உள்ளது.
இது செயற்கைக் கோளை அடிப்படையாகக் கொண்ட குறுகிய பட்டை இணையப் பொருட்கள் தொழில்நுட்பத்தில் ஒரு திருப்புமுனையைக் கொண்டு வர உள்ளது.
இது பரந்த வரம்புடன் கூடிய புதிய இணையப் பொருட்களுக்கான சாதனங்களில் செயல்படுத்துவதற்காக வேண்டி மேம்படுத்தப்பட்ட ஒரு குறைந்த மின் பரந்த பரப்புத் தொழில்நுட்பமாகும்.
இது சாதனங்களின் மின் நுகர்வு, அலைக் கற்றைத் திறன் மற்றும் அந்த அமைப்பின் திறன் ஆகியவற்றை மேம்படுத்த உள்ளது.
இந்தத் தொழில்நுட்பமானது இரண்டு வாகனங்கள் மற்றும் இதர IOT சாதனங்களை இணைப்பதற்குப் பயனுள்ளதாக உள்ளது.