குறுங்கோள்களை ஒத்த வால் நட்சத்திரம்/இருண்ட வால் நட்சத்திரங்கள் ஆனது ஒளிரும் நீட்சிகள் இல்லாத மற்றும் குறுங்கோள்களை ஒத்த வானியல் அமைப்புகள் ஆகும்.
நாசா நிறுவனமானது, 2017 ஆம் ஆண்டில் நமது சூரிய குடும்பத்தில் நுழையும் முதல் விண்மீன் பொருளைக் கண்டறிந்து பின்னர் அதனை உறுதிப்படுத்தியது.
குறுங்கோள்களை ஒத்த வால் நட்சத்திரங்கள் ஆனது பெரும்பாலும் சிறியவையாகும், அதாவது சில மீட்டர்கள் முதல் சில நூறு மீட்டர்கள் வரை அகலம் கொண்டவையாகும்.
அவை விசித்திரமான சுற்றுப்பாதைகள் மற்றும் அளவில் பெரிய "வெளிப்புற இருண்ட வால் நட்சத்திரங்கள்" எனவும், "உள்புற இருண்ட வால் நட்சத்திரங்கள் எனவும் வகைப் படுத்தப் படுகின்றன.
அவை சூரியக் குடும்பத்தின் மிகவும் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வதற்கு முன்னதாக அவற்றைச் சூரியனுக்கு அருகில் கொண்டு வரும் நீளமான, நீள்வட்டப் பாதைகளைப் பின்பற்றுகின்றன.