ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது இரட்டைக் குறுங்கோள் திசை மாற்ற சோதனை (Double Asteroid Redirection Test - DART) என்ற கிரக பாதுகாப்புத் திட்ட வாகனத்தைச் செலுத்தும் என நாசா தெரிவித்துள்ளது.
2021 ஜுன் மாதம் கலிபோர்னியாவிலிருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இந்த DART கிரகப் பாதுகாப்புத் திட்டமானது செலுத்தப்படும்.
இந்த விண்கலமானது பூமிக்கருகில் உள்ள டிடிமோஸ் எனும் குறுங்கோளின் துணைக்கோளும் பூமியிலிருந்து சுமார் 4 மில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ளதுமான 540 அடி அகலமுடைய (165 மீட்டர்) டிடிமூன் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீது மோதும்.
இந்தத் திட்டத்திற்கு பின்னர் 2023-ல் “ஹெரா” என்றழைக்கப்படும் ஐரோப்பாவின் திட்டமானது டிடிமோஸ் அமைப்பை நோக்கிச் செலுத்தப்பட்டு 2026-ல் அங்கு சென்றடையும்.
சமீபத்தில் ஜப்பானின் ஹயாபூசா 2 விண்கலமானது விண்வெளிப் பாறையான ருயுகுவின் மீது அதன் புறப் பரப்பிலிருந்து ஆதிப்பொருளை ஆய்வுக்கு எடுப்பதற்காக தாமிர வெடிப் பந்தினை மோதச் செய்தது.