ஒரு வானியலாளர்கள் குழுவானது, சூரியனின் ஒளியில் மறைந்திருக்கின்ற, பூமிக்கு அருகில் உள்ள மூன்று மாபெரும் குறுங்கோள்களைக் கண்டறிந்துள்ளது.
இவற்றில், 2022 AP7 என அழைக்கப்படும் ஒரு குறுங்கோளானது, கடந்த பத்து ஆண்டுகளில் கண்டறியப்பட்ட, ஒரு மிகப்பெரிய கோளினை உள்வாங்கக் கூடிய அளவிலான குறுங்கோள் என்று நம்பப்படுகிறது.
இது பூமிக்கு "மிகவும் அபாயகரமானது" ஆகும்.
இது 1.5-கிலோமீட்டர் அகலம் கொண்டது என்பதோடு, ஒரு நாள் நமது கிரகத்துடன் மோதக் கூடிய அளவிற்கு இது மிகப்பெரிய ஒரு சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது.
2021 LJ4 மற்றும் 2021 PH27 ஆகிய மற்ற இரண்டு குறுங்கோள்களும் பூமியின் சுற்றுப் பாதையின் எல்லைக்குள் பாதுகாப்பாக வரையறுக்கப்பட்ட சுற்றுப்பாதைகளைக் கொண்டுள்ளன.
ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான விட்டத்தினைக் கொண்ட 2021 LJ4 அளவில் சிறியது ஆகும்.
2021 PH27 எனப்படும் குறுங்கோளானது சூரியனுக்கு மிக அருகில் இதுவரை நன்கு அறியப்பட்ட குறுங்கோள் ஆகும்.
இதன் காரணமாக, அதன் மேற்பரப்பு ஈயத்தை உருக்கும் அளவுக்கு வெப்பமடைகிறது.