TNPSC Thervupettagam

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான புதிய திட்டங்கள்

August 29 , 2022 822 days 972 0
  • திருப்பூரில் நடைபெற்றப் பிராந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பல முன்னெடுப்புகளை தமிழக முதல்வர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (TNCGS)

  • இந்தத் திட்டமானது, இந்திய அரசின் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளையுடன் இணைந்து ரூ.40 லட்சம் வரையிலான தகுதி வாய்ந்த கடன்களுக்கு 90% உத்தரவாதத்தை வழங்கும்.
  • தமிழக அரசானது இந்தத் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் தொகையினை ஒதுக்கி உள்ளது.
  • இந்தக் கொள்கையின் கீழ், குறைந்தபட்சம் மூன்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பதினைந்து நாட்களுக்குள் கடன்களை வழங்கும்.

தமிழ்நாடு வர்த்தக வரவு தள்ளுபடி முறை (TN TREDS)

  • தமிழ்நாடு வர்த்தக வரவு தள்ளுபடி முறை என்பது ஒரு நிறுவனத்தின் வளத் திட்டமிடல் (ERP) ரீதியில் பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வழங்கீடுகளுக்குத் தாமதமாக பணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்களைச் சரி செய்யும் ஒரு தளமாகும்.
  • இந்தத் தளமானது அரசுக்குச் சொந்தமான அனைத்து நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் உயர்நிலைக் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அணுகக் கூடியதாக இருக்கும்.
  • 179வது நாளின் இறுதிக்குள் தமிழ்நாடு வர்த்தக வரவு தள்ளுபடி முறை தளத்தில் இடம் பெற்றிருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு நிறுவனம் பணம் செலுத்தவில்லை என்றால், தமிழ்நாடு வர்த்தக வரவுத் தள்ளுபடி முறையில் பதிவேற்றப் பட்ட கட்டணங்களுக்கான நிலுவைத் தொகையை TAICO வங்கி 180வது நாளில் செலுத்தும்.

மற்ற முன்னெடுப்புகள்

  • இந்த நிகழ்ச்சியின் போது அரசானது குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவன வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் பெயரினை (M-TIPB) "FaMeTN" என மறு பெயரிட்டது.
  • கோவையில் தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தை முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
  • இது புதிய தென்னை நார் உற்பத்தித் தொழிற்சாலைகளை நிறுவுதல், சர்வதேச வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளுதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை நிறுவுதல் மற்றும் தொழில் மற்றும் கல்வித்துறை இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்